ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில், ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-07-31 21:03 IST

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் வட்டக்கிளை தலைவர் மகுடபதி தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் நளினா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை ஒப்படைக்கவில்லை எனக்கூறி விருதுநகர் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், அவருக்கு மீண்டும் பணி வழங்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்