தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

முத்துக்கடை பஸ் நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-09-22 23:07 IST

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பஸ் நிலையத்தில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு சாதி பாகுபாடுகளின் அடிப்படையில் பணியை தேர்வு செய்யும் விதமாக விஸ்வகர்மா யோஜனா திட்டம் உள்ளதாக குற்றஞ்சாட்டினர். மேலும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்