டெங்கு கொசு ஒழிப்பு
திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது.;
திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளத்திடல், மரைக்கான்சாவடி, தைக்கால் தெரு, இந்திராநகர், வாணியத்தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் மணி சுந்தரம் அறிவுறுத்தலின் பேரிலும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் வழி நடத்துதலின் பேரிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது. இந்த பணி பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் சுகாதார ஆய்வாளர் பரமநாதன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அலுவலக உதவியாளர் மாதவன் மற்றும் பேரூராட்சி டெங்கு ஒழிப்பு களப்பணியாளர்கள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று அங்குள்ள குப்பைகள், தேங்காய் மட்டைகள், டயர்கள், உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களை அகற்றி கொசு மருந்துகளை அடித்து பொது மக்களுக்கு டெங்கு கொசு பற்றியும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்து கூறினர்.