டெங்கு கொசு ஒழிப்பு பணி

அனுமந்தபுரம் கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது.;

Update:2022-07-15 22:31 IST

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர், ரமேஷ் குமார் தலைமையிலான சுகாதார பணியாளர்கள் அனுமந்தபுரம், சந்தப்படுகை உள்ளிட்ட கிராம பகுதிகளில் டெங்கு கொசு அதிக அளவில் இருப்பதை கண்டறியப்பட்டது. இது குறித்து சுகாதாரத்துறை இளநிலை பூச்சிகள் அலுவலர் தனம், வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து டெங்கு கொசுகள் புகை மருந்து அடித்து அழிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் கழுவு நீர் மற்றும் பிளாஸ்டிக், தென்னை நாற்கழிவுகள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இப்பணியில் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம், சுகாதார மேற்பார்வையாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்