ஆலங்குடியில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
ஆலங்குடியில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.;
ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் அழகன்விடுதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அழகன்விடுதி அழகருக்கு சொந்தமான இடத்தில் சாராய ஊறல்கள் போட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 1,000 லிட்டர் சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனர்.