2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.;
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலை சிறுகலூர் வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சிறுகலூர் வனப்பகுதிக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக 8 பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், அந்த ஊறலை கீழே கொட்டி அழித்தனர். தொடர்ந்து சாராய ஊறலை பதுக்கிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.