"தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் வெளியாகவுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க டிஜிபி உத்தரவு

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள அணைத்து திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-04 15:14 GMT

சென்னை,

இந்தி இயக்குனர் சுதீப்டோ சென், 'தி கேரளா ஸ்டோரி' என்ற பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ''டீசர்'' சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன.

இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த படம் நாளை திரைக்கு வரவுள்ளது.

இந்த திரைப்படம் வெளியீட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையும் சுப்ரீம் கோர்ட்டு திரைப்படம் வெளியீட்டுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது .

இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள அணைத்து திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கடிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

திரை அரங்குகளில் பார்வையாளர்களை முழுமையான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் திரைப்படத்திற்கு எதிராக ஒரு சில அமைப்புகள் போராட்டம், கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்