சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.;
சென்னை,
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு;
* வேப்பேரி காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
* காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம்
* பிராங் டி.ரூபன் - போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆவடி காவல் ஆணையரகம்
* டி.ரமேஷ் - அரும்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம்
* காத்திருப்போர் பட்டியலில் இருந்த புருஷோத்தமன் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம்
* பரத் - நீலாங்கரை காவல் உதவி ஆணையராக நியமனம்
* பாலகிருஷ்ண பிரபு- சென்னை மேற்கு பிரிவு போக்குவரத்து காவல் உதவி ஆணையராக நியமனம்
* ராஜா - சென்னை வேப்பேரி காவல் உதவி ஆணையராக நியமனம்
* தட்சணாமூர்த்தி - பூக்கடை காவல் உதவி ஆணையராக நியமனம்
* சரண்யா- சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக நியமனம்
* அருண் - கோயம்பேடு காவல் உதவி ஆணையராக நியமனம்
* சுதர்சன் - தி.நகர் காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.