குடிநீர் வராததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

குடிநீர் வராததை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.;

Update:2023-06-14 00:15 IST

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சியில் 4-வது வார்டில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதையொட்டி வார்டு உறுப்பினர் பாஸ்கர் தலைமையில் அந்த வார்டை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் கிராமம் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமம்) பிரபாகரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உடனடியாக அந்த வார்டுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்