மொரப்பூர்:
கடத்தூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராசாமணி (வயது 75). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கடத்தூரில் இருந்து பொம்மிடி நோக்கி வந்த மோட்டார்சைக்கிள் ராசாமணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (51) ஆகியோர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராசாமணி மற்றும் காயம் அடைந்த மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் சிவக்குமார் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராசாமணி இறந்தார்.
இதுகுறித்து ராசாமணி மகன் அன்பரசு கடத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.