சூளகிரி:
சூளகிரி தாலுகா தோரிப்பள்ளி பக்கமுள்ள கொரகுறுக்கியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35). விவசாயி. இவர் நேற்று முன்தினம் எஸ்.திம்மசந்திரம் பகுதியில் உள்ள நிலத்தில் புல் வெட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார வயரில் அவரது கை பட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.