பிரமாண்ட தேசிய கொடி

தினத்தந்தி செய்தி எதிரொலியாக தேனி ரெயில் நிலையத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் பிரமாண்ட தேசிய கொடி ஏற்றப்பட்டது;

Update:2022-08-11 20:00 IST

தேனி ரெயில் நிலையத்தில் சுமார் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட பிரமாண்ட தேசியகொடி கடந்த 2 வாரத்துக்கு முன்பு பலத்த காற்று வீசியதில் கிழிந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அந்த தேசிய கொடி அகற்றப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த கொடிக்கம்பத்தில் புதிதாக பிரமாண்ட தேசியகொடி பறக்கவிடப்பட்டது. தேசியகொடியை பறக்க விடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்