பெண் போலீஸ் ஏட்டுவிடம் தகராறு

கோர்ட்டு வளாகத்தில் பெண் போலீஸ் ஏட்டுவிடம் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்;

Update:2022-07-14 20:29 IST

கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருபவர் பேபி. இவர் ஒரு கைதியை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (எண்2) கோர்ட்டிற்கு அழைத்து வந்தார். அங்கு வராண்டாவில் நின்று கொண்டிருந்த போது, ஒரு ஆசாமி குடிபோதையில் ஏட்டு பேபியை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் அவர், மதுரையை அடுத்த கரிசல்குளம் பாரதிநகரை சேர்ந்த கோவிந்தன் என்ற சரவணன் (வயது 34) என்பது தெரியவந்தது.

அவர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடத்தில் தகராறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். சரவணன் மீது ஏற்கனவே ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.

மேலும் செய்திகள்