நகராட்சி அலுவலர்களிடம் தகராறு; 6 பேர் மீது வழக்கு

கோவில்பட்டியில் நகராட்சி அலுவலர்களிடம் தகராறுசெய்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-02 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தைக்கு நகராட்சி வருவாய் ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்றனர். அவர்கள் வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளை மூடி சீல் வைத்தனர். அப்போது அங்கு திரண்ட வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, வியாபாரிகளை கலைந்து போக செய்தனர். மேலும், சீல் வைக்கப்பட்ட 3 கடைகளும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், கிழக்கு போலீஸ் நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) எஸ்.பார்த்தசாரதி அளித்துள்ள புகாரின்பேரில், சின்னமாடசாமி, குமார், செல்வம், எஸ்.எஸ்.சுரேஷ், தமிழரசன், பாலமுருகன் ஆகிய 6 பேர் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், பணியாளர்களை அவதூறாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்