பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-07-02 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர், குண்டாறு அணை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வினியோகிக்கபடுகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால் குண்டாறு அணையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் செங்கோட்டை நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 19 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதன் அளவு குறைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் லிட்டர் நீர் தான் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த கோடை காலம் முதல் தற்போது வரை வறட்சியை காரணம் காட்டி 10 நாட்களுக்கு ஒரு முறை நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகப்படுகிறது.

இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது செங்கோட்டை 3, 4-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சுடரொளி ராமதாஸ், சரஸ்வதி ஆகியோர் தனது சொந்த செலவில் தனது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு லாாிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்