ஏலகிரி மலையில் அங்கன்வாடி மையம் கட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

ஏலகிரிமலையில் அங்கன்வாடி மையம் கட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2022-08-03 17:21 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை புங்கனூர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் இல்லாமல் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இதனால் இங்குள்ள பொதுமக்கள் புங்கனூர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று முன்தினம் ஏலகிரி மலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு படகுத் துறை மற்றும் சிறுவர் பூங்காவிற்கு செல்லும் சாலையின் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க இடத்தை தேர்வு செய்தார்.

ஆய்வின்போது திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான், ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன், துணைத் தலைவர் திருமால் உள்ளிட்ட துறை அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் என பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்