தி.மு.க. முகவர்கள் கூட்டம்

குருக்கள்பட்டியில் தி.மு.க. முகவர்கள் கூட்டம் நடந்தது.;

Update:2023-08-05 00:15 IST

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் குருக்கள்பட்டியில் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, வெற்றி விஜயன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பூத் முகவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என எம்.எல்.ஏ. பேசினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்