ஐடி துறையில் முதல் இடத்தை பிடிக்க திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஐடி துறையில் முதல் இடத்தை பிடிக்க திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-03-14 05:38 GMT

சென்னை,

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரிட்ஜ் கருத்தரங்கினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

தொழில்நுட்பம் ஒரு குடையின் கீழ் வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. ஐடி துறையில் முதல் இடத்தை பிடிக்க திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இளைய தலைமுறை தொழில் நுட்பத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப கொள்கையை முதலில் உருவாக்கியது திமுக அரசு தான். கையடக்க தொலைபேசியில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன. எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தகவல் தொழிநுட்பத்துக்கு வித்திட்டவர் கருணாநிதி.

தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. தரவுகள் தான் இந்த காலத்தின் முக்கிய எரிபொருள், அதற்காக புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. வதந்திகளை பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க சிலர் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்