டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-07 19:26 GMT

குன்னம்:

தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் இளையபெருமாள் (வயது 24). டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர், தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின்னர் இளையபெருமாளுக்கு திருமணம் செய்து வைப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

இதனால் மனமடைந்த இளையபெருமாள் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இது குறித்து பாண்டுரங்கன் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று இளையபெருமாளின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்