போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி

பழனி நகராட்சி பள்ளியில் போதைப்பொருள் உறுதிமொழியை மாணவர்கள் எடுத்து கொண்டனர்.;

Update:2022-07-21 21:18 IST

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) சுதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலம் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு வாசகமான 'வேண்டாம் போதை' என்ற உறுதிமொழியை மாணவர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்