நெல்லை: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-12-27 06:34 IST

நெல்லை,

நெல்லை அருகே உள்ள தெய்வச்செயல்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் மனைவி சந்திரா (வயது 57). இவர் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வருகிறார். தினமும் காலையில் அவர் தெய்வச்செயல்புரத்திலிருந்து சமாதானபுரத்திற்கு தனியார் பஸ்சில் வேலைக்கு வருகிறார்.

இதைபோல் சம்பவத்தன்று சந்திரா தூத்துக்குடியில் இருந்து நெல்லை வந்த தனியார் பஸ்சில் தெய்வச்செயல்புரம் பஸ் நிறுத்தத்தில் ஏறினார். அப்போது அவர் அருகே நின்று கொண்டிருந்த 3 பெண்கள், தங்களின் சேலை முந்தானியை சந்திராவின் மீது எதார்த்தமாக போடுவது போல் அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, வல்லநாடு பஸ் நிறுத்தத்தில் இறங்கிவிட்டனர்.

சந்திரா சமாதானபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது அவர் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்