குடிபோதையில் தகராறு; வாலிபர் கைது

குடிபோதையில் தகராறு; வாலிபர் கைது;

Update:2023-01-10 00:15 IST

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த சுப்பையகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய்(வயது 19), வசந்த்(22). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும், சம்பவத்தன்று குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சஞ்சய் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சஞ்சய் கொடுத்த புகாரின்பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வசந்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்