குடிநீர் கட்டணம் செலுத்தாததால் குழாய் இணைப்புகள் துண்டிப்பு

கூடலூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாததால் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

Update: 2022-11-24 18:45 GMT

கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு லோயர்கேம்பில் உள்ள கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கூடலூர் நகராட்சிக்கு கடந்த 3 வருடங்களாக கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புதாரர்களை கண்டறிந்து அவர்களை நகராட்சிக்கு கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள், கன்னிகாளிபுரம், ஏ.எம்.சர்ச் தெரு, அருந்ததியர் ஓடை தெரு, கண்ணகி நகர் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்தாத குழாய் இணைப்புகளை துண்டிப்பு செய்தனர். அப்போது தொழில்நுட்ப உதவியாளர் முத்துவேல் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்பு தாரர்களின் முகவரிகளை கண்டறிந்து குழாய் இணைப்பை துண்டிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்