மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது என முத்தரசன் கூறினார்.

Update: 2023-07-29 19:21 GMT

ராஜபாளையம்,

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது என முத்தரசன் கூறினார்.

ேவலைவாய்ப்பு

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு ராஜபாளையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் குழு கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ, ராமசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச்செயலாளர் முத்தரசன், மாவட்ட செயலாளர் லிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற போது விலைவாசியை கட்டுப்படுத்தி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என வாக்குறுதி அளித்தார். இதுவரை அதனை நிறைவேற்றவில்லை.

விலைவாசி உயர்வு

அரிசி விலை 15 சதவீதத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது. சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

ஆனால் இந்தியாவில் விலையை குறைக்காமல் பெட்ரோல் மீது வரி விதிக்கப்படுகிறது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு அதிகமான வரி கிடையாது. தமிழ்நாட்டில் ஜவுளி, பின்னலாடை, ஆயத்த ஆடை, பம்பு செட், என்ஜினீயரிங் பொருட்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து வந்த நிறுவனத்தினர் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதனால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர்.

மறியல் போராட்டம்

மத்திய அரசு வழங்கி வந்த அரிசியை நிறுத்தி விட்டது. இந்த அரிசி தற்போது தனியாருக்கு ஏலம் மூலம் கொடுக்கப்படுகிறது. இதனால் 50 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை வெளிச்சந்தையில் வாங்கும் நிலைக்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வுக்கு காரணமான வேலையின்மையை அதிகரித்த மத்திய அரசை கண்டித்து வருகிற செப்.12,13,14 ஆகிய 3 நாட்கள் மத்திய அரசு அலுவலகம் முன்பு தமிழகம் முழுவதும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்