திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

காளசமுத்திரம் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்;

Update:2022-07-24 20:29 IST

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 24-ந் தேதி மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது.

இதை முன்னிட்டு அன்று அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து கொடியேற்றம் நடந்தது. ெதாடர்ந்து மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை அருகே துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை நாடக நடிகர்கள் நடத்தினர்.

மாலையில் கோவில் முன்பு யாககுண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

விழாவில் காளசமுத்திரம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும் இரவு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திரை இசைப்பாடல்கள் பழைய கீதங்களா? புதிய கீதங்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

நாளை (திங்கட்கிழமை) பகல் 12மணிஅளவில் தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் இன்னிசை பாட்டுக் கச்சேரி நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்