தென்காசியில் கல்வி கண்காட்சி

தென்காசியில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி நடந்தது.;

Update:2022-05-30 22:09 IST

தென்காசி:

தென்காசியில் ஸ்மார்ட் ஈவன்ட்ஸ் சார்பில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகளுக்கான கல்வி கண்காட்சி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று தென்காசி குற்றாலம் ரோட்டில் உள்ள சவுந்தர்யா ஹாலில் தொடங்கியது. இதனை கிரசன்ட் பல்கலைக்கழக சென்னை வர்த்தக இயக்குனர் கணேஷ் குமார் திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுமார் 50-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். தொடக்க நிகழ்ச்சியில் ஸ்மார்ட் ஈவன்ட்ஸ் இயக்குனர் ஜிவித், ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபாலன், அருள்முருகன், கல்லூரி பேராசிரியர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்