போக்சோவில் எலெக்ட்ரீசியன் கைது

போக்சோவில் எலெக்ட்ரீசியன் கைது;

Update:2022-06-29 21:45 IST

பொள்ளாச்சி

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. இவரை கடந்த 24-ந் தேதி முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த மாணவிக்கும், சேத்துமடையை சேர்ந்த எலெக்ட்ரீசியன் காளிமுத்து(வயது 23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதும், அவர் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்