ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுடன் மின்வாரிய அதிகாரிகள் சந்திப்பு
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுடன் மின்வாரிய அதிகாரிகள் சந்தித்து பேசினர்.;
இட்டமொழி:
தமிழகத்தில் நடைபெற்று வரும் மின்வாரிய பணிகள் மற்றும் பொதுமக்களின் மின்வாரியம் தொடர்பான குறைகளை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்வாரிய அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருந்தார்.
அதன்படி, பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனை, மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ மற்றும் மின்வாரிய என்ஜினீயர்கள் நேரடியாக சந்தித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மின்வாரிய பணிகள் குறித்து விளக்கி கூறினார்கள். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மின்வாரிய பணிகள் குறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் எடுத்து கூறினர்.
அப்போது மின்வாரிய அதிகாரிகள் ஜெயசீலன், சார்லஸ், முத்துக்குமார், ஸ்டாலின் ஜெபராஜ், ஜெகன், பத்மகுமார், செல்வகார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.