மரங்களை சேதப்படுத்திய யானைகள்

யானைகள் மரங்களை சேதப்படுத்தின.;

Update:2023-06-01 01:24 IST

வத்திராயிருப்பு, 

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான கூமாப்பட்டி வண்ணாப்பாறை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, பலா, வாழை, தேக்கு ஆகிய மரங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனா். இந்தநிலையில் வண்ணாப்பாறை பகுதியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அப்துல் மஜித், பாலு என்பவருக்கு சொந்தமான தோப்பிற்குள் புகுந்து மா மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். யானைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவும், யானை தாக்குதலில் இருந்து பயிர்கள், மரங்களை காப்பாற்றவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்