காதலியின் தந்தையை மிரட்டிய என்ஜினீயர் கைது
தக்கலையில் வீடு புகுந்து காதலியின் தந்தையை மிரட்டிய என்ஜினீயர் கைது;
தக்கலை,
தக்கலை அன்புநகரை சேர்ந்தவர் ஜெபின் (வயது27), என்ஜினீயர். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் 19 வயதுடைய ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். சமீப காலமாக அந்த இளம்பெண் ஜெபினிடம் பேசுவதில்லை எனத்தெரிகிறது. இந்தநிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ஜெபின் நேற்று காலையில் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்து அவரை அழைத்தார். இதை பார்த்த இளம்பெண்ணின் தந்தை அவரை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெபின் கம்பை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபினை கைது செய்தனர்.