குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்

தியாகதுருகத்தில் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்கப்பட்டது.;

Update:2023-06-23 00:15 IST

தியாகதுருகம், 

தியாகதுருகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்ெகட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கி ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 138 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்ெகட்டுகளை வழங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் மணிமேகலை வரவேற்றார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தயாபரன், இளநிலை உதவியாளர் அருண்பிரசாத் மற்றும் அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மேற்பார்வையாளர் மலர்கொடி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்