குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்ட முகாம் தொடக்கம்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்ட முகாம் தொடங்கப்பட்டுள்ளது.;

Update:2022-05-25 02:24 IST

பெரம்பலூர்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வட்டத்தின் மூலம் சுகாதாரத் துறையுடன் இணைந்து பிறப்பு முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா, பெரம்பலூர் வட்டாரம் நூலகத் தெரு குழந்தைகள் மையத்தில் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அனைத்து வட்டாரங்களிலும் 21 நாட்களில் 168 முகாம்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற 25 குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி, வட்டார மருத்துவ அலுவலர் சூரியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்