கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு போலீசார் நடவடிக்கை

கல்வராயன்மலையில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2022-10-26 18:45 GMT


கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரம் துரூர் கிராம வனப்பகுதியில் சமூக விரோதிகள் சிலா் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் அமைத்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் துரூர் வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 3,400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி, கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு சாராய ஊறல் அமைத்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்