ஈரோடு-சத்தியமங்கலம்4 வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

ஈரோடு-சத்தியமங்கலம் 4 வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-11 21:38 GMT

கவுந்தப்பாடி

ஈரோடு-சத்தியமங்கலம் 4 வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு முதல் சத்திவரை 4 வழிசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு முதல் சித்தோடு வரை ஓரளவு பணிகள் முடிவடைந்து உள்ளது. சித்தோட்டில் இருந்து கோபி வரை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே ரோடுகள் போட்டும், பல இடங்களில் ஜல்லிகள் மட்டும் போட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதனால் இந்த வழியாக செல்லும் இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்கள், லாரிகள் என அனைவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் புழுதி அனைவரது கண்களையும் பாதிப்பதுடன் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

கோரிக்கை

இந்த நிலையில் ஈரோடு செல்லும் சாலையில் தம்பிகலை அய்யன் கோவில் பிரிவு அருகே ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சின் முன் சக்கரம் பஞ்சர் ஆனது. இதனால் அலுவலகம் செல்பவர்கள், பள்ளிக்கூடம், கல்லூரி செல்பவர்கள், பல்வேறு அலுவல் காரணமாக வெளியே செல்பவர்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

இது போல் சம்பவம் தினமும் மோட்டார்சைக்கிள் மற்றும் கார் ஓட்டுபவர்களுக்கும் நடக்கிறது. எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்