திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆலத்தூர் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் அளித்த மனுவில் 'நாங்கள் ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். சங்கத்தில் வரவு-செலவு வைத்துள்ளோம். எங்களுடைய ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் கடையில் உணவு பொருட்கள் வாங்க செல்லும்போதெல்லாம் சங்கத்தின் ரேஷன் கடை பூட்டப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் வரவு-செலவு செய்பவர்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் சரிவர சங்கத்துக்கு வருவது இல்லை
சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, வருமான சான்று, பட்டா, சிட்டா போன்ற தேவைக்காக சங்கத்தில் உள்ள இ-சேவை மையம் இருந்தும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. 140 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கும் பயன் இல்லாத நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.