எட்டயபுரம் புதுஅம்மன் கோவில் கொடை விழா

எட்டயபுரம் புதுஅம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

Update: 2023-07-30 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் கீழரத வீதியிலுள்ள புது அம்மன் கோவில் பொங்கல் மற்றும் கொடை விழா கடந்த 24-ந் தேதி கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணி அளவில் பொங்கல் கொடை விழா மற்றும் மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து புது அம்மன் குடி அழைப்பு நிகழ்ச்சி, துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து நடைபெறும். மாலை 4 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பால்குட ஊர்வலம், அன்னதானம், முளைப்பாரி அம்மன், கண் திறப்பு நிகழ்ச்சி, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி, முளைப்பாரி ஊர்வலம் ஆகியவை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை புது அம்மன் கோவில் உறவின்முறை மற்றும் இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்