நெல்லையில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

நெல்லை சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு;

Update:2022-05-27 01:48 IST

நெல்லை:

நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் உடையார்பட்டி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் மீன் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மீன்களை பிடிக்க குத்தகைதாரர்கள் தண்ணீரை வெளியேற்ற பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு குளத்தில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் குளம் அருகே கூடி, மோட்டாரை நிறுத்த சொல்லி திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்