அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு - கலெக்டர் தகவல்

ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ சேர்க்கைகான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-10-14 09:14 GMT

காஞ்சீபுரம் மாவட்டத்தில் புதிதாக தெடங்கி உள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் பொருட்டு இந்த மாதம் 30-ந் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

அதன்படி, பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு சென்று பயன் பெறலாம்.

இங்கு கம்மியர் மோட்டார் வாகனம், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் பிரிவில் 2 ஆண்டுகால பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், பற்றவைப்பவர் பிரிவில் ஒரு ஆண்டு பயிற்சிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி காலத்தில் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு உதவி தொகையாக மாதந்தோறும் ரூ.750, விலையில்லா மிதிவண்டி, மடிகணினி, இலவச புத்தகங்கள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்