கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்;

Update:2022-10-24 00:15 IST

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மை இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் பள்ளி கல்வி, உயர்கல்வி, தொழிற்பயிற்சி கல்வி மற்றும் பேகம் ஹசரத்மஹால் உதவி தொகை திட்டத்தின் கீழ்(புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021-2022-ம் ஆண்டுக்கான உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் ஏற்கனவே விண்ணப்பிக்காமல் இருந்தால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்