நயினார் நாகேந்திரனுக்கு வாங்கிய சால்வையை தீவைத்து எரிக்க முயன்ற பாஜக நிர்வாகி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், கிருஷ்ணகிரி சென்ற அவருக்கு பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால், நயினார் நாகேந்திரனுக்கு நிர்வாகிகள் சால்வை அணிவிக்க மாவட்ட நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.
இதனால், விரக்தி அடைந்த பாஜக நகர பொதுச் செயலாளர் வடிவேலன் என்பவர், தான் வாங்கி வந்த சால்வையை நடுரோட்டில் தீவைத்து எரிக்க முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஜக நிர்வாகிகள் ஓடிச்சென்று அதை தடுத்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.