குடும்ப நல விழிப்புணர்வு முகாம்
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குடும்ப நல விழிப்புணர்வு முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது.;
இளையான்குடி,
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குடும்ப நல விழிப்புணர்வு முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
விழிப்புணர்வு முகாம்
இளையான்குடி மேலப்பள்ளி வாசல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குடும்ப நல விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சுகாதார புள்ளியியலாளர் பிரசாந்த் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் தேவைகள், பற்றாக்குறைகள் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழ்நாடு அரசால் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
இதன் நோக்கமாக இளம் வயது திருமணத்தை ஒழித்தல், இளம் வயது கற்பத்தினை தவிர்த்தல், தேவையற்ற கர்ப்பங்களை தடுத்தல், ஆரோக்கியமான பிறப்பு இடைவெளியினை உருவாக்குதல், சிறு குடும்ப நெறியினை பாதுகாத்தல், குடும்ப நலனில் ஆண்களின் பங்கினை ஊக்குவித்தல், பெண்கல்வியை ஊக்குவித்தல், சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல், தாய்மார்கள் பிரசவத்தில் இறப்பு வீதம் குறைத்தல் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு முகாம் நடைபெற்று வருகின்றது என்று பேசினார்.
இளையான்குடி ஒன்றிய சேர்மன் முனியாண்டி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், துணை இயக்குனர்கள் விஜய் சந்திரன், தர்மர், வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன்அரவிந்த் ரெஜீஸ், மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், இளையான்குடி தாசில்தார் கோபிநாத், செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.