பாம்பு கடித்து விவசாயி சாவு

பாம்பு கடித்து விவசாயி இறந்தார்.;

Update:2023-03-03 00:15 IST

திருப்புவனம்

பூவந்தி அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பூங்கொடிச்சாமி (வயது 50). இவர் வீட்டின் அருகே உள்ள தனது வயலில் கரும்பு விவசாயம் செய்திருந்தார். நேற்று முன்தினம் இரவு பூங்கொடிச்சாமி கரும்புக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது அவரை பாம்பு கடித்தது. பின்னர் அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இச்சம்பவம் குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்