பரமத்தி பகுதியில்விவசாயிகளுக்கு இலவச சாமை விதைகள் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

Update:2023-05-04 00:30 IST

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களிடம் நிலவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சோளம், கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு, குறு தானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க தேசிய சிறு தானிய இயக்கத்தின் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக பரமத்தி பகுதியில் இந்த ஆண்டில் ஏராளமான விவசாயிகள் சிறு, குறு தானிய பயிர்களை ஆர்வமுடன் பயிரிட்டுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு சிறு, குறு தானியங்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறு தானிய இயக்கம் என தனியாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் சாமை விதைகள் 4 கிலோ கொண்ட மினிகிட் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை போதுமானது. ஜூன், ஜூலை (ஆடிப்பட்டம்) மாதங்களில் விதைப்பு செய்ய ஏற்றது. எனவே பரமத்தி பகுதி விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்