ஏரி ஆக்கிரமிப்புக்கு விவசாயிகள் எதிர்ப்பு

மேட்டத்தூர் ஏரி ஆக்கிரமிப்புக்கு விவசாயிகள் எதிர்ப்பு

Update: 2023-05-22 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

உளுந்தூர்பேட்டை தாலுகா மேட்டத்தூர் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியை 2 பேர் 4 ஏக்கர் பரப்பளவிற்கு ஆக்கிரமித்து சாலை அமைத்தனர். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர்கள் மூலம் 3 அடி உயரத்துக்கு மண்ணை கொட்டி மீண்டும் ஏரியை ஆக்கிரமித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வழிந்தோட முடியாமல் விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்து பயிர்கள் சேதமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியை ஆக்கிரமித்து சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்