சத்தியமங்கலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

Update: 2022-07-14 21:51 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பூ மார்க்கெட் விவசாயிகள் சங்க தலைவர் ஆர்.முத்துசாமி தலைமை தாங்கினார். பவானி ஆறு பாதுகாப்புக்குழு செயலாளர் ரவிக்குமார், பூ மார்க்கெட் விவசாயிகள் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், '100 நாள் வேலை திட்ட ஆட்களை விவசாயிகள் பணிக்கு அனுப்ப வேண்டும். கடந்த 6 மாத காலத்தில் 100 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ள களைக்கொல்லி, பூச்சி மருந்து, உரம், விதை விலைகளை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிக்கு பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 வழங்க வேண்டும். வாசனை திரவ ஆலையை சத்தியமங்கலத்தில் ஏற்படுத்த வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. பவானி ஆற்றின் நிலத்தடி நீரை விஷமாக்கும் காகித ஆலைகளை மூட வேண்டும்,' உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்