தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்- சிலைக்கு தலைவர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

Update: 2024-05-24 05:41 GMT

சென்னை,

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சி.பா.ஆதித்தனார் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து வணங்கினார்.தினத்தந்தி தலைமை பொது மேலாளர் (நிர்வாகம்) ஆர்.சந்திரன், தலைமை பொது மேலாளர் (புரோமோஷன்) ஆர்.தனஞ்செயன், பொது மேலாளர் (மனிதவளம்) ஜே.பி. விஜயராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து தினத்தந்தி, மாலைமலர், தந்தி டி.வி., டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல், மின்மினி, தந்தி ஒன் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாபா பாண்டியராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம். தி.மு.க.வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி, பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்