தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்;

Update:2022-08-04 02:10 IST

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கூத்தூர் அம்பேத்கர்புரத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 23). திருமணமாகாதவர். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் எந்த பயனும் இல்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில், பிரியாவின் உடலை திருக்காட்டுப்பள்ளி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்