தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-11-28 00:45 IST

பெ.நா.பாளையம்

கோவையை அடுத்த இடிகரை மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி இந்துஜா (வயது 38). இந்த நிலையில் மணிகண்டனின் தாயுக்கும், இந்துஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த இந்துஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்