மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் உர உற்பத்தி நிறுவனங்கள்

தேசிய அளவில் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சாகுபடி பருவத்திற்கு ரசாயன உரம் தேவைப்படும் நிலையில் சீனா யூரியா ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளததால் உர உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பதாக வேளாண் நிபுணர் தெரிவித்தார்.

Update: 2023-09-09 18:45 GMT

விருதுநகர்

தேசிய அளவில் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சாகுபடி பருவத்திற்கு ரசாயன உரம் தேவைப்படும் நிலையில் சீனா யூரியா ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளததால் உர உற்பத்தி நிறுவனங்கள் மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருப்பதாக வேளாண் நிபுணர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது,

திடீர் தடை

உலக அளவில் யூரியா உள்ளிட்ட ரசாயன உர இறக்குமதியில் இந்தியா பிரதானமாக விளங்கும் நிலையில் சீனா திடீரென யூரியா ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் உலக சந்தையில் ரசாயன உரங்களின் விலை உயர வாய்ப்பு ஏற்படும் என கணிக்கப்படும் நிலையில் ரசாயன உர இறக்குமதியை இந்தியா தாமதப்படுத்தும் நிலையில் உலக அளவில் ரசாயன உரங்களின் விலை உடனடியாக உயர வாய்ப்பு இருக்காது என கருதப்படுகிறது.

இப்பிரச்சினையில் மத்திய அரசு தனியார் உர உற்பத்தி நிறுவனங்கள் உர இறக்குமதி தொடர்பாக உற்பத்தி நிறுவனங்களே முடிவெடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. உரத்திற்கான மானியத்தை மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மானியம்

கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காலத்தில் இதே நிலை ஏற்பட்ட போது மத்திய அரசு தலையிட்டு உர இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் 2021-22-ம் ஆண்டில் ரசாயன உரங்களின் விலை டன் 1000 டாலராக அதிகரித்தது.அதற்கு முன்பு 280 முதல் 300 டாலராக இருந்தது.

மத்திய அரசு கடந்த 2021-22-ம் ஆண்டில் ரூ1.54 லட்சம் கோடி மானியமாக வழங்கிய நிலையில் கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.2.25 லட்சம் கோடி மானியமாக வழங்கியது. கடந்த 2022-23ல் 58.54 லட்சம் மெட்ரிக் டன் உரம் விற்பனையான நிலையில் 18.84 லட்சம் மெட்ரிக்டன் உரம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

நம்பிக்கை

எனவே தற்போதும் தேசிய அளவில் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சாகுபடிக்கு தேவையான உரம் இறக்குமதி செய்யப்படும்போது மத்திய அரசு தேவையான அளவிற்கு மானியம் வழங்கும் என்ற நம்பிக்கையில் உர விற்பனை நிறுவனங்களும் விவசாயிகளும் உள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்