சோக்காடியில் பெருமாள் கோவில் திருவிழா

சோக்காடியில் பெருமாள் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-10-09 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பெருமாளப்பன் திருவிழா நடைபெற்றது. 2 நாட்கள் நடந்த திருவிழாவில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக கருட வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய நிலையில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வீதி உலாவின்போது கிராமத்தின் முக்கிய இடங்களில் தேங்காய் உறி அடித்தல் நிகழ்ச்சி நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்